சென்னை: சென்னையில் பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சௌகார்பேட்டை நகை வியாபாரியிடம் பணியாற்றும் இளைஞரிடம் ரூ.10 லட்சம், 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம் தந்ததும் ரூ.25,000 வாங்கிக் கொண்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார். பணம், நகை பறிமுதல் விவகாரம் சட்டம்-ஒழுங்கு போலீசுக்கு தெரிந்ததும் ரூ.25,000 வியாபாரியிடமே ஒப்படைத்தனர். பணியில் ஒழுங்கீனமாக இருந்த புகாரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
+
Advertisement