சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.86,000ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து விற்பனை ஆகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து புதிய உச்சம் கண்டு வருகிறது. ஒரே சமயத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.85,120க்கும் விற்பனையானது. அன்றைய தினம் தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159க்கும், கிலோவுக்கு ரூ.6000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் மூலம் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை மேலும் உயர்வை தான் சந்தித்தது. இன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.85,600க்கு விற்பனையானது. அதே போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்திருந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.160க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.86,000ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து விற்பனை ஆகிறது. காலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்த தங்கம் விலை மாலையில் ரூ.560 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.10,770-க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160-க்கும் விற்பனை ஆகிறது. காலையில் கிராமுக்கு ரூ.60 அதிகரித்த தங்கம் விலை மாலையில் ரூ.70 அதிகரித்துள்ளது.