Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னையில் தங்கக் கட்டிகளை திருடிச் சென்று ஒடிசாவில் பதுங்கியிருந்த 4 பேர் கைது

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நகைப் பட்டறையில் 1.78 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்று ஒடிசாவில் பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரீஷ் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் வேலை செய்து வந்த நால்வரும், தங்கக் கட்டியுடன், அங்கிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றுள்ளனர். 2 தனிப்படைகள் அமைத்து நால்வரையும் தேடி வந்த போலீசார், ஒடிசாவில் வைத்து அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.