சென்னை: போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளரின் ஐபோன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே திரைப்பட இணை தயாரிப்பாளரான சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு தயாரிப்பாளரான தினேஷ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையிலே அடைத்த நிலையில், ஒருநாள் காவலில் எடுத்து திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இவருக்கு சினிமா வட்டாரத்தில் அதிகப்படியான தொடர்பு இருப்பதினால் அங்கு ஏதேனும் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தினேஷ் ராஜிடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஐபோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஐபோனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிய போலீசார், தினேஷ் ராஜின் ஐபோன் தரவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபோனில் கிடைத்த தரவுகளை வைத்து பண பரிவர்த்தனை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பார்ட்டி உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளதால் அங்கு ஏதேனும் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்கி பயன்படுத்தினரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


