சென்னை: சென்னை, கோவை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு அதிகமாக உள்ள பகுதிகளில் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் அதிக பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தினார். 4 நாள்களாகியும் காய்ச்சல் குறையாவிட்டால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் சோமசுந்தரம் தெரிவித்தார். அரசு, தனியார் மருத்துவமனைகளில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் சோமசுந்தரம் என்றும் சோமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
+
Advertisement