சென்னை அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாக்ஸர் ரக நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சி
சென்னை: சென்னை அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாக்ஸர் ரக நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அபிராமபுரம் குட்டி கிராமணி பகுதியில் வீட்டு வேலை செய்து வரக்கூடிய உஷா, அவர் இன்று அதிகாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அருகில் இருக்கக்கூடிய நாய் திடீர் என உஷாவை துரத்தி துரத்தி கடிக்க முற்பட்டிருக்கிறது. இதனால் பயந்துபோன பெண் கீழே விழுந்து அந்த நாய் விரட்டி விரட்டி காது மற்றும் கழுத்து பகுதியில் காயமும் ஏற்பட்டது.
இதனிடையே உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் விசாரணையில் உஷா வேலை செய்து வரும் பக்கத்து வீட்டில் இருக்கக்கூடிய குமார் என்பவர் வளர்த்து வரக்கூடிய பாக்ஸர் ரக நாய் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திருக்கிறது.