சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நாளை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.
+
Advertisement
