Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு-வாலாஜாபாத் சாலை உள்ளிட்ட சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்கள்: இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

வாலாஜாபாத்: செங்கல்பட்டு- வாலாஜாபாத் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சம் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்படுவதாக அச்சம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

வாலாஜாபாத் பேரூராட்சியில் இங்கு 15 வார்டுகள் உள்ளன. மேலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், ரயில் நிலையம், காவல் நிலையம், நூலகம், வங்கிகள், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் கல்குவாரி மற்றும் மலை மண் குவாரிகளும் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் ஜல்லி கற்கள், எம் சாண்ட், சவுட்டு மண், மலை மண் உள்ளிட்டவைகள் பெரும்புதூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட நகர் பகுதியில் செயல்படும் கட்டுமான பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் இடுபொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், எடுத்துச் செல்லப்படும் கனரக லாரிகளில் அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்களை பொருத்தி உள்ளதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் லாரியில் இருந்து வரும் அதிக சத்தத்தால் நிலைகுலைந்து பதற்றத்துடன் செல்கின்றனர். மேலும் ஒரு சில வாகன ஓட்டிகள் கீழே விழும் சூழலும் ஏற்படுகின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத் சாலை, காஞ்சிபுரம் சாலை, பெரும்புதூர் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகிய சாலைகளில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை எழுப்பும் கனரக லாரிகள் சென்று வருகின்றன.

இதில் பெரும்பாலான லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஓட்டுநர்கள் ஹாரன் அடிப்பதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்படுகின்றன. ஒரு சில நேரங்களில் வயது முதிர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பொழுது உடல் உபாதை ஏற்பட்டு மயக்க நிலைக்கு செல்லும் சூழலும் நிலவுவதாக கூறுகின்றனர். இது போன்ற நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இப்பகுதியில் செல்லும் லாரிகளை மடக்கி அதிக சத்தத்தை எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு பொருத்தப்பட்ட ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்’ என்றனர்.