Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு..!!

ஸ்டாக்ஹோம்: 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும். அதன்படி ஏற்கனவே மருத்துவம், இயற்பியலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம். யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.