Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு..!!

ஸ்வீடன் : 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம்.யாஹி ஆகியோருக்கு நோபல் பரிசு. உலோகம்-கரிமம் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.