Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் வந்த வினை; 50 பவுன் நகை கொடுத்தால்தான் திருமணம்: உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

அண்ணாநகர்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பல இடங்களுக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒன்றை வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஆதித்யன் (31) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

நாளடைவில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். மறுத்தேன். தொடர்ந்து வற்புறுத்தியதால் காதலிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதையடுத்து அவரது பெற்றோர், 50 சவரன் நகை கொடுத்தால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். 50 சவரன் எங்களால் போடமுடியாது என கூறிேனாம். அதற்கு ஆதித்யனின் பெற்றோர், ‘என் மகன் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டான். உன்னால் என்ன செய்ய முடியமோ செய்துகொள் என மிரட்டுகிறார்கள்.

எனவே, என்னை ஏமாற்றிய ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். போலீசார் விசாரணை செய்ய காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து ஆதித்யனை நேற்று போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.