Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அடித்தது ஜாக்பாட்.. ChatGPT பேச்சைக் கேட்டு லாட்டரி சீட்டு வாங்கிய பெண் ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்!!

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சாட் ஜி.பி.டி. செயலியை பயன்படுத்தி, லாட்டரி வென்ற அமெரிக்கப் பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாட் ஜி.பி.டி. என்னும் செயற்கை நுண்ணறிவு உரையாடி செயலி மூலமாக தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜி.பி.டி.யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என ஆலோசனை கேட்டுள்ளார்.

அது பரிந்துரைத்த எண்களை அடிப்படையாகக் கொண்டு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.33 கோடி) பரிசு விழுந்துள்ளது. இது குறித்து பேசும் அவர், இந்த வெற்றிப் பணத்தை முழுமையாக என் மறைந்த கணவரின் நினைவாக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சாட் ஜி.பி.டி. உதவியால் லாட்டரி வென்றுள்ளதோடு, அந்த பரிசுத்தொகையை முழுமையாக நன்கொடையாக வழங்கும் அவரது முடிவும் இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.