சார்லி கிர்க் மரணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் சர்ச்சைக் கருத்து பதிவிட்டவர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்து பதிவிட்ட 6 வெளிநாட்டவர்களின் விசாவை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்தது. கொடூர கொலையை கொண்டாடுபவர்களை அமெரிக்காவில் தொடர அனுமதிக்க முடியாது எனக் கூறி பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, மெக்சிக்கோ, ஜெர்மனி, பராகுவே நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.