Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சார்லி கிர்க் துக்க நிகழ்வில் சந்தித்துக் கொண்ட டொனால்டு ட்ரம்ப் - எலான் மஸ்க்: மஸ்கின் சைகை ‘pyramid hand symbol’ சொல்வது என்ன?

வாஷிங்டன்: அமெரிக்கா அரசு கொண்டுவந்த வரி மசோதா காரணமாக டிரம்புக்கும், எலான் மஸ்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், சார்லி கிர்கின் இறுதி சடங்கில் இருவரும் சந்தித்து கை குலுக்கி உள்ளன. அப்போது மஸ்க் மற்றும் டிரம்ப் இருவரும் pyramid கை சைகையை காட்டியது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க், கடத்த புதன்கிழமை கல்லூரி நிகழ்வில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் சார்லி கிர்கின் மரணத்தை அறிவித்து, அவரை சிறந்த மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் என்று விவரித்தார். அமெரிக்காவில் இளைஞர்கள் இதயத்தை சார்லியை விட வேறுயாரும் புரிந்துகொள்ள முடியாது. அவர் அனைவராலும், குறிப்பாக என்னாலும் நேசிக்கப்பட்டு போற்றப்பட்டார். இப்போது அவர் எங்களுடன் இல்லை என்று டிரம்ப் எழுதினார். சார்லி கிர்கின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவரும் தேர்தலுக்கு முன்னாள் இருந்து ஒற்றுமையாக இருந்துவந்த நிலையில், டிரம்பின் வரி மசோதாவுக்கு பிறகு இருவரது உறவிலும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சார்லி கிர்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இருவரும் சந்தித்து கைகுலுக்கி உரையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் இருவரது சைகை பேசும்பொருளாகி உள்ளது. மஸ்க் கைகளை அவருக்கு முன்னாள் கொண்டு வந்து ஒரு முக்கோணம் அல்லது பிரமிடு வடிவத்தை உருவாக்கினார். மஸ்க் மட்டுமல்ல டிரம்பும் இதேபோன்று தோரணையில் பிரதிபலிப்பது போன்று தோன்றியது. இந்த சைகைக்கு அர்த்தம், சக்தி அல்லது செல்வாக்கின் அடையாளத்தை கூறுவதாக சிலர் கூறுகின்றனர். மக்கள் இதை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அதாவது நம்பிக்கை, அதிகாரம், தன்னம்பிக்கை அல்லது ஆழ்ந்த சிந்தனை எனவும் கூறப்படுகிறது. இந்த சின்னம் பெரும்பாலும் அரசியல், ராஜதந்திரம், வணிக கூட்டங்களில் காணப்படுகிறது. மஸ்க் மற்றும் டிரம்ப் சைகையை செய்யும் போது ஒருவரை ஒருவர் பிரதிபலித்ததால் தங்களது முந்தைய பகையை கடந்த செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான குறியீடாக இது இருக்கலாம் எனவும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.