சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலை ெகாண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10ம் தேதி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் அனேக இடங்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தாலும், கரூர், திருநெல்வேலி, சேலம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், கடலூர், தர்மபுரி,கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக நேற்று 102 டிகிரி ெவயில் கொளுத்தியது. மதுரை, ஈரோடு 100 டிகிரி, தஞ்சாவூர், திருச்சி 99 டிகிரி, வேலூர், திருத்தணி, பாம்பன், நாகப்பட்டினம், கரூர், கடலூர் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 97 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வ ாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, மாவட்டங்களில் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்.