Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை அக்டோபருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை, சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் - ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் “L” வடிவ மேம்பால பணிகளை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், சர்தார் பட்டேல் சாலையில், காந்தி மண்டபம் சாலை முதல் ஜி.எஸ்.டி. சாலை வரை, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால், அந்தப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தற்போதைய நான்கு வழித்தட சாலையை, ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், சென்னை பெருநகர கண்காணிப்புப் பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், சென்னை கண்காணிப்புப் பொறியாளர் சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.