சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரியின் 20வது தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது
சென்னை: சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரி (CAPSI) தனது 20வது தேசிய மாநாட்டை 2025 நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் சென்னை ஐஐடி மத்ராஸ் ஆராய்ச்சி பூங்கா அரங்கில் சிறப்பாக நடத்தியது.
இம்மாநாட்டில் பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், நுண்ணறிவு, சட்ட அமலாக்கம், பாதுகாப்புத் துறை, தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல துறைகளிலிருந்து தலைசிறந்த நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 600 பிரதிநிதிகளும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகக் குற்றவியல் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், இது CAPSI வரலாற்றில் மிகுந்த தாக்கம் செலுத்திய மாநடாக அமைந்தது. மாநாட்டின் தலைமை விருந்தினராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டார்.
அவரை CAPSI-யின் தேசிய தலைவர் குன்வர் விக்ரம் சிங் மற்றும் CAPSI-யின் தமிழ்நாடு பிரிவு தலைவர் நெவில் ரயன் வரவேற்றார். தன் வரவேற்பு உரையில் நெவில் ரயன், “நாடு முழுவதும் பாதுகாப்புத் துறை பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் நிறுவன நிலைத்தன்மையில் அவசியமான பங்கை வகிக்கிறது என்பதை வலியுறுத்தினார்”. CAPSI மற்றும் APDI தலைவர் குன்வர் விக்ரம் சிங் தனத்து முக்கிய உரையில் “பாதுகாப்புத் துறை தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் மேம்பட்ட பயிற்சிகளையும் ஒருங்கிணைந்த தரநிலைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.”
அமைச்சர் சி.வி. கணேசன் தன் உரையில் CAPSI-யின் பல ஆண்டுகால பங்களிப்புகளை பாராட்டி, தனியார் பாதுகாப்புத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றுவதாக கூறினார். அவர், இந்தத் துறை பெரும் அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, நாட்டின் GST வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.மேலும், COVID-19 காலத்தில் பாதுகாப்பு காவலர்கள் அவசர நிலைகளிலும் பணியாற்றியதை வீரத்தன்மையுடனும் தியாகத்துடனும் பாராட்டி, அவர்களுக்கு மேம்பட்ட நலத்திட்டங்களை உருவாக்க முதல்வருடன் ஆலோசிப்பதாக கூறினார். அமைச்சரின் உறுதி மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ‘DigiSuraksha’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது, ‘CAPSI Connect’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது, சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பல துறைகளுக்கிடையே நெட்வொர்க்கிங், இணை பணிகள் மற்றும் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் மாநாட்டில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் சீமா அகர்வால் ஐ.பி.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபொது, “தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இலவச தீயணைப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.அவர் சிறந்த பாதுகாப்பு பணியாளர்களுக்கு ‘கோல்டன் கார்ட்’ விருதுகளை வழங்கினார்.”
மாநாடு CAPSI மற்றும் ADPI பொதுச் செயலாளர் மகேஷ் சர்மாவின் நன்றி உரையுடன் நிறைவுற்றது. அவர் பேச்சாளர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பு குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
"இந்திய பாதுகாப்புத் துறையில் புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மூலோபாய வலுப்படுத்தல்" குறித்து நிபுணர்கள் விவாதம் முதல் நாளில் உயர்தர தொழில்நுட்ப மற்றும் கருப்பொருள் அமர்வுகளுடன் ஆரம்பமானது.
இந்திய பாதுகாப்புத் தொழில்துறை 2.0 - மாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள், உள்ளூர் பாதுகாப்பு மற்றும் தேசிய தயார்நிலை, தீ மற்றும் உயிர் பாதுகாப்பு முன்னேற்றங்கள், மின்னணு பாதுகாப்பு அபாயங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அவசரநிலை மேலாண்மை போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். பாதுகாப்பு, காவல் துறை, தனியார் பாதுகாப்பு, மின்னணு நுண்ணறிவு மற்றும் தொழில்துறை வட்டார நிபுணர்கள் கலந்து கொண்டு, துறையின் தற்போதைய சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து ஆழமான பார்வைகளை வெளிப்படுத்தினர்.
“புதுமையும் ஒழுங்குமுறையும் தான் துறையின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்” - குன்வர் விக்ரம் சிங்
மாநாட்டின் இரண்டாம் நாள், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சோகின் சௌஹான் தலைமையில் நடைபெற்றது. CAPSI தலைவர் திரு குன்வர் விக்ரம் சிங் துறையில் “புதுமை, ஒழுங்குமுறை மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் உற்சாகமான உரையாற்றினார்.” அந்நாளில் நடைபெற்ற அமர்வுகள் பிராந்திய அமைதியின்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு, கார்ப்பரேட் நுண்ணறிவு மற்றும் நிறுவன அபாயங்கள், பேரழிவுக்கான தயார்நிலை, ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் வான் பாதுகாப்பு, நவீன விசாரணைகளில் குற்றவியல் அறிவியல், போலி பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றன.தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் வழக்குக் கதைகள், தொழில்நுட்ப நுண்ணறிவு, மற்றும் கொள்கை வடிவமைப்பு பார்வைகளின் மூலம் விவாதங்களை செழுமைப்படுத்தினர். மேலும், CAPSI-யின் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். Security sTar Agencies Rating (STAR) திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள், அமைப்பு மதிப்பீடுகள் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் அமர்வுகளும் நடைபெற்றன.


