ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை - தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளை கண்டறியவும் மற்றும் மாற்றுத்திறனிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை வழங்குவதற்காகவும் அமர் சேவா தொண்டு நிறுவன களப்பணியாளர்களைக்கொண்டு வட சென்னையில், ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் பிப்ரவரி முதல் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப்பணி நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இதில் அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறும் மேலும் இப்பணி முழுமையாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்புதரவேண்டும்.