Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லறை தோட்டம், கபர்ஸ்தான்கள் புனரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: பேரவையில் அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் நாசர் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னை, திருநெல்வேலி, கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் புதிதாக தொடங்கப்படும். இச்சங்கங்களுக்கு விதைத் தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் 7 சங்கங்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கப்படும்.

* கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களில் உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைத்தல், புதிதாக சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் பாதைகளை புனரமைக்க முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு சவுதி அரபியாவில் உள்ள புனித தலமான மக்கா மற்றும் மதினா, கிறித்துவர்களுக்கு இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கப்படுவதை போன்று, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவிலுள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் மானியம் வழங்கப்படும்.