டெல்லி: நிறுவனம் நிறுத்தியது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ நிறுவனம், சமீபத்திய ஆண்டுகளில் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. துவக்கத்தில் இலவச சேவையை கொடுத்து அதிகப்படியான டேட்டாவை பயன்படுத்த விட்டு, இப்போது ஒரு ஜிபி அல்லது ஒன்றரை ஜிபி டேட்டாவிற்கு நூற்றுக்கணக்கில் கட்டணம் போட்டு வருகிறது ஜியோ.
அதிலும் ஒரு ஜிபி-லாம் வேண்டாம் என்ற பாணியில் அந்நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமாக இருந்த ரூ.249 கட்டணத்தை ரூ.299 ஆக உயர்த்தியுள்ளது. ரூ.299 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி இண்டெர்நெட் மற்றும் வரம்பற்ற கால்கள் பெறும் சேவை தற்போது ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ரூ.249க்கு ஒரு ஜிபி டேடா வசதியுடன் அளிக்கப்பட்டு வந்த இந்த பிளான் நிறுத்தப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச மாதாந்திர பேக் ரூ.249 பிளானை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஒருநாளுக்கு ஒரு ஜிபி டேட்டா அடங்கிய 249 கட்டண பேக் இனி இருக்காது என ஏர்டெல் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பதிலாக கட்டண உயர்வுடன் இந்த பிளான் அமல்படுத்தப்படுமா என்பது பற்றி தெரியவில்லை.