தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கரூர் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களுக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த அசம்பாவிதம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என நடுநிலையான பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்.
சிபிஐ விசாரணை வேண்டும். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும் பல சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். எதிர்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். தமிழ்மாநில காங்கிரஸ் யாரையும் குறிவைத்து அரசியல் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.