சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அவரது சகோதரர் இமானுவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கடந்த மாதம் 24ம் தேதி சிபிஐக்கு மாற்றியது. சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
+
Advertisement