Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிபிசிஎல் நிறுவனம் முன்பு போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்: நிலம் வழங்கியதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என புகார்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் சிபிசிஎல் நிறுவன விரிவர்க்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு மற்றும் அதற்கான பணியை பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த பனங்குடி, நறுமணம், கோபுரஜபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் 620 ஏக்கர் விவசாயி நிலம் கையகப்படுத்தப்பட்டது.

கையெடுக்கபடுத்தப்பட்ட, விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். சாலை மறியல், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் போராட்டம் என பலகட்ட போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், இதுவரை அந்த இழப்பீட்டு தொகையானது வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த சூழலில் சிபிசிஎல் நிறுவனம் இருக்கக்கூடிய பனங்குடி நுழைவாயில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தொடர் பேச்சு வார்த்தை ஈடுபட்டாலும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விவசாயிகள் தொடர் போராட்ட காரணமாக நாகப்பட்டினம் வட்டாச்சியர் நாகை டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.