தமிழ்நாட்டில் சாதிக்கொலைகள் தடுப்பது குறித்து விரிவான அறிக்கையை 3 பேர் குழு 3 மாதத்தில் சமர்ப்பிக்க அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சாதியக் கொலைகளைத் தடுப்பது குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு புதிதாக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் விதத்தில்.
பரிந்துரைகளை வழங்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனிகுமார், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராமநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கமிஷனை அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள், பொது விழிப்புணர்வுத் திட்டம் மற்றும் அரசாங்கத்திற்கான குறிப்பிட்ட, நிலையான மற்றும் செயல்படக்கூடிய நடவடிக்கைகளை வரைவு செய்யும். கடந்த ஜூலை மாதம், 27 வயது தலித் ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ், எம்பிசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்ததற்காக பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள், சமூக எல்லைகளைத் தாண்டி திருமணம் செய்து கொள்ளும் மக்களின் சாதி அடிப்படையிலான கொலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


