ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை
சென்னை: ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மீது பெறப்படும் புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் உடனே விசாரிக்க வேண்டும். விசாரனை அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.