சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; அசாமைச் சேர்ந்தவருக்கு சாகும்வரை சிறை!
சென்னை: சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அசாமைச் சேர்ந்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2020ம் ஆண்டு சித்துராஜபுரம் பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பட்டாசு ஆலைத் தொழிலாளியான அசாமைச் சேர்ந்த மொஜம் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.
2023ம் ஆண்டு போக்சோ நீதிமன்றம் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையை அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆயுட்கால சிறை தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மொஜம் அலி செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதிகள் கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர்.


