புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மார்ச் 14ம் தேதி பதவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் வழக்குகளை அவசரமாக பட்டியலிடுவது தொடர்பாக நீதிபதிகள் முன் வாய் வழியாக முறையிடும் நடைமுறையை கொண்டு வந்தார். அவருக்கு முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவசர வழக்குகளை பட்டியலிட மின்னஞ்சல்கள், எழுத்துபூர்வ கடிதங்கள் மூலம் கோருமாறு வக்கீல்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி கவாய் பிறப்பித்த உத்தரவில், திங்கள்கிழமை(இன்று) முதல் எந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் அவசர வழக்குகளை பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் முன் ஆஜராகி கோருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இளம் வழக்கறிஞர்கள்தான் அந்த பணியை செய்ய வேண்டும். இது எனது அமர்வில் நடைமுறைப்படுத்தப்படும். இதை ஏற்று கொள்வது மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.