நீலகிரி: நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட் கிலோ ரூ.65ஆக உயர்ந்துள்ளதால் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரியில் விளைவிக்கும் கேரட் சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கேரட் விலை சில நாள்கள் முன்பு வரை ரூ.30க்கும் கீழே இருந்து வந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement
