வாடிகன் சிட்டி: அருளாளர்களான கார்லோ அகுடிஸ் மற்றும் பியர் ஜார்ஜியோ பிரஸாட்டி ஆகியோரை புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலி வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்தது. போப் பதினான்காம் லியோ தலைமையில் நடந்த புனிதர் பட்ட திருப்பலியில் 36 கர்தினால்கள்,270 பிஷப்கள்,212 பாதிரியார்கள் பங்கேற்றனர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்பு போப் உரையாற்றினார். அப்போது கார்லோ அகுடிஸ், பியர் ஜார்ஜியோ பிரஸாட்டியை புனிதர்களாக அறிவித்தார்.இருவரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து தலைசிறந்த படைப்புகளை கடவுளுக்கு அர்ப்பணித்ததாக போப் லியோ கூறினார்.
கடந்த 1991ல் லண்டனில் பிறந்த கார்லோ அகுடிஸ் கணித மேதையாவார். 15 வயதில் ரத்த புற்றுநோயால் அவர் இறந்தார். கத்தோலிக்க போதனைகளைப் பரப்புவதற்காக வலைத்தளங்களை உருவாக்கினார். அவர் ‘‘கடவுளின் செல்வாக்கு செலுத்துபவர்” என்ற புனைப்பெயரைப் பெற்றார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இறந்த மற்றொரு இளம் கத்தோலிக்க ஆர்வலரான பியர் ஜியோர்ஜியோ பிரஸாட்டியுடன் சேர்ந்து அவர் புனிதர் பட்டம் பெற்றார்.