கயானா: மேற்கு இந்திய தீவுகளில் நடந்து வரும் கரிபீயன் லீக் டி 20 தொடரின் குவாலிபயர் 1ல் கயானா அமேசான் வாரியர்ஸ், செயிண்ட் லுசியா கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற செயிண்ட் லுசியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 90 ரன், அகஸ்டி 50 ரன் எடுத்தனர். பிரிட்டோரியஸ் 2 விக்கெட், மோட்டி, இம்ரான் தாகிர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய கயானா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம்ப்சன் 76 ரன், சாய் ஹோப் 44 ரன் எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட், சம்சி 2 விக்கெட் எடுத்தனர். குவாலிபயர் 2ல் செயிண்ட் லுசியா கிங்ஸ் அணி, நைட்ஸ் ரைடர்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி செப். 22ம் தேதியில் நடக்கும் பைனலில் கயானா அணியை எதிர்கொள்ளும்.