ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), கார் மெக்கானிக். இவரது மனைவி லதா(46), இவர்கள் மகன் தினேசுடன் (19), அகரம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்று விட்டு காஞ்சிபுரம் வழியாக நேற்று காலை திரும்பி கொண்டிருந்தனர். காரை தினேஷ் ஓட்டினார்.
காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலை நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் லதா சம்பவ இடத்திலும், மற்ற இருவரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர்.