ஐதராபாத்: முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்திலுள்ள உண்டவல்லி பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். அவர் தனது நண்பர்களுடன் புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு, ஐதராபாத்திலுள்ள வீட்டுக்கு திரும்பும் வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது காரில் பயணித்த விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது நண்பர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் பயணித்த கார் பலத்த சேதமடைந்தது. எதிரே வந்த கார் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. பிறகு விஜய் தேவரகொண்டா தனது நண்பரின் காரில் பயணித்து வீட்டுக்கு திரும்பினார். சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது.
+
Advertisement