Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஸ்டைலாக ரோல்ஸ் ராய்ஸ் ஓட்டும் 72 வயது மணியம்மா!

ஒரு காலத்தில் ஸ்கூட்டி ஓட்டவே தயங்கிய பெண்கள் இன்று வானம் ஏறி விமானம் ஓட்டவே பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் அட என மேலும் ஆச்சர்யம் கொடுக்கிறார் மணியம்மா. பின்னே... 72 வயதான இவர், துபாயில் அசால்ட்டாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வைரலானால் வியக்காமல் இருக்க முடியுமா?!வைரலாகும் வீடியோவின் படி, சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண் மணி. தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை அந்த வீடி யோவில் காண்பிக்கிறார். பின்னர் உயர்ரக வாகனத்தை அவர் இயக்குகிறார். மணியம்மா என்றழைக்கப் படும் இவர். இதுபோன்ற வீடி யோக்களை சமூக வலைத்தளங் களில் அவ்வப்போது பகிர்ந்து வருவதால் இவருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம். இவரது இன்ஸ்டாகிராம் பயோவின் படி, சொகுசு கார்கள் முதல் கனகரக வாகனங்கள் வரை குத்துமதிப்பாக 11 வகையான வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளார். டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருவதாகவும் அதில் தெரிவித்து இருக்கிறார்.

முன்பே சொன்னபடி இவரது வயது 72. ஆனால், ஓட்டுநர் அனுபவமோ 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. தசாப்தங்களாகத் தொடரும் இவரது டிரைவிங் ஆர்வம் உண்மையிலேயே மற்றவர்களுக்கு இன்ஸ்பையரிங் வைட்டமின். ஏனெனில் இந்தியாவில் மிகக் குறைவாக பெண்கள் கார்கள் ஓட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் தனது திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளார். யெஸ். 1978ம் ஆண்டு கேரளா, எர்ணாகுளத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கிய தனது கணவரின் ஊக்கத்தால் இவரும் ஸ்டியரிங்கை பிடிக்கத் தொடங்கியுள்ளார். 1981ஆம் ஆண்டு வாகன ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். 1984ஆம் ஆண்டு கனரக வாகன பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமமும் பெற்றார்.அப்படியாக கார்கள் மட்டுமல்லாமல் கிரேன்கள், கனரக வாகனங்களையும் இயக்க கற்றுக் கொண்டுள்ளார்.2004 ஆம் ஆண்டு கணவரின் மறைவிற்குப் பின்னர் மணியம்மா தனது குடும்பத்திற்காக ஓட்டுநர் பள்ளியின் பொறுப்பை, தானே ஏற்று அதனை வழி நடத்த ஆரம் பித்திருக்கிறார். கேரளா எர்ணாகுளம் வருவோருக்கு “ A2Z” ஓட்டுநர் பயிற்சி பள்ளி குறித்து தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்கு மணியம்மாவின் ஸ்கூல் பிரபலம். அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது! அம்மா... டிரைவர் அம்மா... அம்மம்மா.

- எஸ். ஆனந்தி