ஈரோடு: ஈரோட்டில் இன்று காலை கார் திடீரென தீ ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு-பெருந்துறை சாலையில் ஒரு குடோன் அருகே இன்று காலை மலைச்சாமிக்கு என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த காரில் இருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. காரில் ஏற்கனவே பிரச்னை இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் மலைச்சாமி காரை ஓர்ஷாப்பில் விட்டு சரி செய்துள்ளார். இந்நிலையில், பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். நல் வாய்ப்பாக தீ விபத்து நடந்தபோது, காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.