நவம்பர் மாதத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் விற்பனை உச்சம் தொட்டுள்ளது. ஏற்றுமதியுடன் சேர்த்து 1 லட்சத்து 71 ஆயிரம் கார்களை மாருதி சுசுகி விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 21சதவீதம் அதிகமாகும் . 57436 கார் விற்பனையுடன் டாடா மோட்டார்ஸ் 2ம் இடத்திலும் 56336 கார்கள் விற்பனையுடன் மஹிந்திரா அண்டு மஹிந்திரா 3ம் இடத்திலும் உள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் தலா 20 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 33,752 கார் விற்பனையுடன் டொயோட்டா 4ம் இடத்திலும் 25,489 விற்பனையுடன் கியா 5ம் இடத்திலும் உள்ளன. இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரையில் 5,33,645 வாகனங்களை விற்று ஹோண்டா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத வளர்ச்சியாகும். டிவிஎஸ் 3,65,608 இரு சக்கர வாகனங்களையும், பஜாஜ் 2 லட்சம் வாகனங்களையும், ராயல் என்ஃபீல்டு 1 லட்சம் வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.

