Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேப்டன் விஜயகாந்த்தின் 73-வது பிறந்தநாள்; பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புகழாரம்!

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருடைய திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியும், அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவித்ததாவது; தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள்.

நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.