Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. எம்ஆர்பி மூலம் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை

வழங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொது கலந்தாய்வு மூலமாக பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் நடந்தது. இந்நிலையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பல மருத்துவர்கள் பணியில் சேரவில்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். நியமனம் ரத்து செய்யப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவோ, மூப்பு அடிப்படையில் மீண்டும் விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் உத்தரவில் கூறியுள்ளார்.