பயிற்சி: கிராஜூவேட் அப்ரன்டிஸ்-.
மொத்த காலியிடங்கள்: 3,500. இவற்றில் தமிழ்நாட்டிற்கு 394 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உதவித் தொகை மாதம் ரூ.15 ஆயிரம்.
வயது: 01.09.2025 தேதியின்படி 20 முதல் 25க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்பில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
10/பிளஸ் 2/பட்டப்படிப்பு ஆகியவற்றில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள் தவிர இதர பிரிவினர்கள் தமிழகத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ,500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.canarabank.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2025.