Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நேரத்தில் தரையிறங்கும் போது பயங்கரம் கனடாவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதியதில் இந்தியர் உட்பட 2 பேர் பலி

ஒட்டாவா: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சுகேஷ்(23). இவர் கனடாவில் உள்ள விமான பயிற்சி பள்ளியில் பைலட் பயிற்சி பெற்று வந்தார். கனடாவை சேர்ந்த மாணவி சவானா மே ரோயஸ்(20). இருவரும் ஸ்டெயின்பாக்கில் உள்ள விமானம் ஓட்டும் பயிற்சி பள்ளியில் சிறிய ரக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் தனித்தனியே பயிற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் வின்னிபெக் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் விமானத்தை தரையிறக்க ஒரே நேரத்தில் முயற்சித்துள்ளனர். அப்போது இரண்டு விமானங்களும் நடு வானில் மோதின. இதில் விமானங்களில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஸ்ரீஹரி, சவானா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கனடாவின் தொலைக்காட்சி நிறுவனம்(சிபிசி) தெரிவித்துள்ளது.