கல்கரி: கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் கனடாவின் கல்கரி நகரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங், நடப்பு சாம்பியனான பெல்ஜியம் வீராங்கனை டினெகிலிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை அனாஹத் சிங் எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஜார்ஜினா கென்னடி, 11-5,11-8,12-10 என்ற செட் கணக்கில் அனாஹத் சிங்கை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் அனாஹத் இறுதி போட்டி கனவு தகர்ந்தது.
+
Advertisement 
 
  
  
  
   
