டொரன்டோ: கனடாவின் டொரன்டோ நகரில் கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக, டெல்லியை சேர்ந்த, உலகின் 45ம் நிலை வீராங்கனை அனாஹத் சிங் பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சிண்டி மெர்லோவுடன் அனாஹத் மோதினார். அப்போட்டியில் அற்புதமாக ஆடிய அனாஹத், 11-3, 11-3, 11-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி வெறும் 17 நிமிடங்களில் நிறைவு பெற்றது.
+
Advertisement
