புதுடெல்லி: பிரபல இந்திய காமெடி நடிகர் கபில்சர்மா. இவர் கனடாவில் சர்ரே பகுதியில் கபே ஒன்றை தொடங்கி உள்ளார். கடந்த ஜூலை 10ஆம் தேதி அவரது கபேயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடுக்கு பயங்கரவாதக் குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனல்குழுத் தலைவர் ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றார். இந்த குழு கனடா அரசால் ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் மிகவும் தேடப்படும் பட்டியலில் ஹர்ஜித்சிங் லட்டியும் உள்ளார். இந்த சூழலில் நேற்று 2வது முறையாக கபில்சர்மா கபேயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சுமார் 25 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் யாருக்கும் காயம் இல்லை. இந்த தாக்குதலுக்கு குர்பிரீத் சிங் என்கிற கோல்டி தில்லான் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகிய இரண்டு கும்பல்கள் பொறுப்பேற்றன.