கனடா: கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை அந்நாட்டை சேர்ந்தவர் மதுபோதையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கனடாவில் வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருவதாக குற்றசாட்டு எழும் நிலையில் மெக் டொனல் உணவகத்தில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.
மதுபோதையில் இருந்த கனடாவை சேர்ந்த நபர் இந்தியரை தள்ளியதில் அவரது செல்போன் கீழே விழுந்தது. அதனை பொறுமையாக எடுத்த இளைஞரை சட்டை காலரை பிடித்து இழுத்த கனடா நபர் அனைவர்க்கும் மேலானவராக காட்டிக்கொள்ளாதே என கூறி வசைபாடியுள்ளார். இதை அடுத்து அங்கே வந்த கடை ஊழியர் தாக்குதல் நடத்திய கனடா நாட்டவரை வெளியே அனுப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
