சென்னை: யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்துக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என தவெக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. விஜய் பிரச்சாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தலைவராக இருக்கும் நீங்கள்தானே கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். முழுமையாக போக்குவரத்து முடங்கினால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று விஜய்க்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
+
Advertisement