Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சம்பவ இடத்திற்கு செல்லாமல், நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல வேண்டுமா..? செந்தில் பாலாஜி பேட்டி!

கரூர்: "கரூர் துயர சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என கரூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். கரூர் விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி! மேலும் கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகள். கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வேலுச்சாமிபுரத்தில் 2000 செருப்புகள் வீதியில் கிடந்தன, காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? இதிலிருந்தே தெரிகிறது, மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை.

விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்னையே நடந்திருக்காது. கரூர் பரப்புரையின் போது குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட தவெக தரப்பில் செய்து தரப்படவில்லை. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது, அவர் கவனத்தை ஈர்க்கவே செருப்பு வீசப்பட்டிருக்கலாம். கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் செய்யப்பட்டது. அப்போது கூட சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆஃப் செய்யப்பட்டது. வீடியோவில் எல்லம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை. கரூரில் 12 மணிக்கு பரப்புரை என சொன்னவர்கள் 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.

வழக்கமாக அரசியல் தலைவர்கள் செய்வதற்கு நேர் மாறாக, விஜய் வாகனத்தின் உள்ளே சென்று, விளக்குகளை அணைத்துவிட்டார். அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அவரை பின் தொடர்ந்தது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தை முன்கூட்டியே நிறுத்திவிடலாம் என காவல்துறை எச்சரித்த பின்பும், தவெகவினர் அதை கேட்காமல் வாகனத்தை நகர்த்திச் சென்று அங்கு நிறுத்தியுள்ளனர். கரூரில் மட்டும் எப்படி நெரிசல் ஏற்பட்டது என்ற கேள்வி, “தினமும் நான் வாகனத்தில் செல்கிறேன். இன்று மட்டும் எப்படி எனக்கு விபத்து நடந்தது?” என்று கேட்பதுபோல் உள்ளது. விஜயின் ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்துள்ளனர். சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது. சரியான திட்டமிடல்களை செய்ய தவறிவிட்டனர்.

கரூரில் பரப்புரை நடக்கும் இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்பாகவே விளக்கை அணைத்து, ஸ்க்ரீன் போட்டு பேருந்தின் உள் பகுதிக்கு சென்றுவிட்டார் விஜய். கூட்டம் எல்லாம் பரப்புரை பகுதிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்தாரா?. சம்பவம் நடத்தபோது சம்பவ இடத்திற்கு செல்லாமல், நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல வேண்டுமா..?. அரசு தன் கடமையை சரியாக செய்தது, ஆனால் அந்த அரசியல் கட்சி தனது கடமையை சரிவர செய்ய வில்லை. விஜய் கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம். தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, எப்படி உடனடியாக மருத்துவமனைக்கு வந்திர்கள்? என எழுப்பப்படும் விமர்சனத்திற்கு பதில் அளித்தார். பாதிப்பு நடந்துள்ளது எனத் தெரிந்ததும் அங்கு செல்லாமல், டிக்கெட் போட்டு சென்னைக்கு போகச் சொல்கிறீர்களா?. பரப்புரையில் அசம்பாவிதம் நடந்த தகவல் கிடைத்ததும், கட்சி அலுவலகத்தில் இருந்து உடனடியாக 7.47 மணிக்கு அமராவதி மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன். என்று கூறியுள்ளார்.