நாமக்கல்: நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (47). லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (37). இவர்களது மகள் மகேஸ்வரி (20), நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் தினேஷ்குமார், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார். அதுமுதல் பூபதி மிகுந்த மனவேதனையில் போதைக்கு அடிமையாகி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, பூபதி மகள் மகேஸ்வரியை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, கலைச்செல்வியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement