சென்னை: சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் புறப்படும் பேருந்துகள் ஆக.27 முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், லஸ் கார்னரிலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடம் எண் 21, 41D, S17, 49K, S5 பேருந்துகள் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். தடம் எண் 49F பேருந்து பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். தடம் எண் 12M, 5B பேருந்துகள் லஸ் கார்னர் அருகில் இருந்து புறப்பட்டுச் செல்லும். மாதாந்திர பயணச்சீட்டு, முதியோருக்கான கட்டணமில்லா டேக்கன்கள் பட்டினப்பாக்கத்தில் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement