ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பேருந்துக்கான காத்திருந்தனர். அப்போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த பள்ளிப்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள், 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக காட்டில் விட்டனர்.
+
Advertisement


