மும்பை : இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று தொடரை சமன் செய்தது. இந்த தொடரில் உடல் தகுதியை காரணம் காட்டி பும்ராவை வெறும் மூன்று போட்டிகளில் தான் இந்திய அணி விளையாட வைத்தது. இந்த சூழலில் பும்ரா விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா 2 தோல்வி மற்றும் ஒரு டிராவை பெற்றது. பும்ரா இல்லாமல் களம் இறங்கிய 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. இதையடுத்து பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் அவர் இனி தேவை இல்லை என்பது போல் ரசிகர்கள் கமெண்ட்களை அடித்து வந்தனர்.
இந்த சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பும்ரா இந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை இந்தியாவுக்கு அளித்தார். முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஆனால் 3வது, 4வது டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டும் களம் இறங்கி அதிலும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 3 டெஸ்டில் அவர் 2 முறை 5விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ரசிகர்கள் பலரும் பும்ரா இல்லாமல் இந்தியா சிறப்பாக விளையாடியது என்று பேசி வருவதை நான் கவனிக்கின்றேன். அது மிகவும் தவறு. பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றது எதேச்சையாக நடந்ததே தவிர அது காரணம் கிடையாது.
பும்ராவின் தரம் என்பது அபாரமானது. அவர் இந்தியாவுக்காக செயல்பட்ட விதத்தை யாராலும் நம்ப முடியாது அளவுக்கு சிறப்பாக இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பான செயல்பாட்டை எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி பும்ரா செயல்படுத்தி இருக்கின்றார். நான் எப்போதுமே பும்ராவை தான் முதலிடத்தில்’’ என்றார். இந்த தொடரில் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டி விளையாடினாலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். பும்ரா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மேலும் 3 டெஸ்டில் விளையாடிய பிறகும் ஐசிசி பவுலர்கள் தரவரிசை பட்டியலில் அவர் முதலிடத்தில் இருக்கின்றார்.