Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் செல்ல நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000 வீதம் 120 பேருக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புனித தலங்களின் விவரம் புத்த மதம் 1, பீகாரில் உள்ள புத்த கயா, உத்தரபிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத் கோயில், பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள். சமண மதம் ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ரணக்பூர் சமண கோயில், ஜெய்சால்மர் சமண கோயில், ஜார்க்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோயில் போன்ற இடங்கள், கர்நாடகாவில் சரவணபெலகோலா.

சீக்கிய மதம் 1, பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மகாராஷ்டிரா) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சவுதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் இத்திட்டத்தின் கீழ் 1.7.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 30ம் தேதி.